உடம்புல்லாத நெருப்பு என தடுத்தா
உறுப்பகண்டு அருத்துபுட்டு
நிமிந்து நிப்பன்
ஒட்டுக்காவந்தாலும்
ஓட ஓட வேரட்டிடுவன்
ஒன்டுனாலும் துண்டாடுவன்
எம் முன்ன வந்து நிக்க
உன் வெக்கத்த விட்டா
யாருக்கு திராணி
சொல்லு புள்ள ஒத்த சொல்ல...
சோகம் தீரல
சோடிய காணல
சோலிய முடிச்சிட
சோந்து நிக்கிற சொர்ணப்புறா
சொமந்திருக்குற வெங்குச்சம் கல்லா
உம் மவ்னத்த கையில புடுச்சி காத்திருகன்
கடைசி நிமிஷம்
நீ கை விட்ட போய்டுவன்
கைலாசம் ...
வாழ்ந்த கட்ட
ஒங்கண்ணு சொட்டாட்டி
வேகாது என் கட்ட .
பசும் வாழ மரத்த
படக்குன்னு வெட்டி
பாத்தா...மக்காநாளு
மறு குருத்து துளுக்கும்
எந்த செம்மத்துலையும் ஒங்கூட
தொத்திக்கிட்டே
வரும் எம் பொழப்பு .
நான் கட்டிகிட்டா
உன்னத்தான்னு சொன்னியே...
வெட்டிக்கிட்டு சாகரன்னு நின்னியே ...
வாய்க்கால்ல எழுதி வச்ச வார்த்த
என் வாழ்கைய ஒடிச்சு புட்ட தீர்க்க .
நான் ஆண்ட நெலம்
என்ன ஆளுஞ்சாமி
சாதி..சனம்..சாமக்கோழி ...
அத்தனயும் ஒனக்குன்னே
தள்ளி வச்சி
ஒத்த மரமா நிக்கிறேனே ...
நீ ஒத்த சொல்லு சொல்லு
நான் தொப்பாகிப் போவ ...
தண்ணிக்கு எறக்கம் வந்து
மூணு முறை தூக்கிவிடும்
ஆத்தா ...நான் அறியாம செஞ்சத்தப்ப
அவுத்துவிட்டு தவிக்க வச்சா ...
அத்துக்கிட்டு போன ஆட்டுக்குட்டி
கெடக்கி வரும்
அதுக்கு முன்னே நரி வந்தா
என்ன பண்ணும்...
உள்ளத சொல்றன் ஒத்துக்கிட்டு
ஏத்துகிடு...
இல்லன்னா என்ன ...
என் செத்த ஒடம்ப ஒருக்கா
வந்து பாத்துப் புடு .
வெடுக்குனு சொடக்கெடுத்து
வெடலக் கத பேசுன
அந்த எடம் வரைல
வெசம் எறங்குது என் நெஞ்சுக்குள்ள .
காத்து என தடுத்தா
அது மூச்ச நிருத்திடுவன்
ஆத்து என தடுத்தா
அருவில அணைபோட்டு
அந்தரத்தில் கட்டிடுவன்.
வானம் என தடுத்த
வகுந்து வகை பத்துடுவன்
நிக்கும் நெலம் என தடுத்தா
நெல குத்த சாச்சிடுவன்
.....................................................................................................................நாளக்கி பாப்பம்
நெஞ்சியில உருளும் உன் நெனப்பு
நெசமா சொல்றன் அது எம் பொழப்பு
நேந்துகிட்ட நேர்த்திக்கடன்
சேக்குலன்னு ....
சாமி குத்தம் ஆயிடுச்சா சொல்லு கண்ணு
நா .....காஞ்ச வெறவா...
காட்டத்து வெள்ளமா ...
கரிச்சான் குருவியின்
தொண பிரிஞ்ச கத்தலா ...
எம் பொழப்பு என்னாவும்
கை கால் வரல
கத சொல்ல வாய் வல்ல
கர சேரும் ஒடமுன்னு
காத்தடிப் பாத்தன்
கல்லை கட்டி போட்டப்ள
சொல்ல கொட்டி போறா ...
எரச்ச வித முளைக்கும்
எளவு வீடு எப்படி சிரிக்கும்
படியளக்கிறான் பரமசிவன்.
எறும்பைஅடைத்து வைத்து
பார்த்து விட்டாள் பார்வதி.
பட்டினியில் பாரதிகள் பாடிக்கொண்டே...
மாநாடு
பேசி முடிந்தாகிவிட்டது
வாழ்க ...ஒழிக...கோசங்கள்
டீக்கடை மேசை உடைப்பில்
எதிரொலிக்கிறது.
ஈரத்துண்ட இழுத்துக்கட்டுங்க
பாரதத்தின் பட்டினி
பக்கத்து விட்டுக்கரருக்கு
தெரிந்துவிடப் போகிறது .
ஒரு தாய் தன் பிள்ளையிடம்
முணுமுணுப்பது
எத்தனை பேரின் காதில்விழுகிறது
சொல்லுங்கள் ...........
களிமண்ணிலா ...
இறைவன் மனிதனை படைத்தான் .
சிரிப்பகத்தான் இருக்கிறது .
முத்தமிடத் தெரியாதவனின்
கதையை படிக்கும் போது.
மரம் வைத்தவன்
தண்ணீர் ஊற்றுவான்.
நல்ல பழமொழி .
கடவுளை முன் வைத்தே
மறுப்பதற்கு .
துப்பட்டா குடைக்குள்
நனைந்து கொண்டிருக்கிறது
உதடுகள் .
உழவு மழை ஆனாலும்
உழ முடியாது
கடற்கரையில் கற்பு .
தூக்கத்தை தொலைத்து
காத்திருக்கிறார் ..விவசாயி ..
அறுவடைக்கு அல்ல
நடப்பட்ட பயிருக்கு
உயிர் பாய்ச்ச
வருமா ...மின்சாரம் என்று
ஒ ...
இது தான்
இழவு காத்த கிளியோ .
சொட்டிக் கொண்டிருக்கிறது .
தெருக் குழாய் .
தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறார்
ஊர் பிரசுரெண்டு .
தமிழ் வளர்க்கும்
பேருந்தில் ,
பயணச் சீட்டு மட்டும்
ஆங்கிலத்தில் .
கறுப்புச் சட்டை மாநாடு .
நல்ல நேரம் பார்த்து
பேச வருகிறார் .
எக்ஸ்எம் எல்ஏ .
மாநிலம் காப்போம் .
அழகான ஓவியத்தோடு
இயற்கையாய் அமைந்ததிருக்கிறது
மரத்தாலான விளம்பர பலகை.
கொலையும் செய்வாள் ...
பத்தினி ...
பொய் பொய் பொய் ..
பிளாட் பார வாசிகள் ஆம் ...
கொசுக் கொலையாளிகள்
உண்மை உண்மை உண்மை
காத்திருப்பில்
ஐந்து நிமிடத்தில்
ஆயிரம் கொலைகள்
நிகழ்த்தி விட்டன
உன் விரல்கள்
பாவம் விட்டு விடு
வாய் இல்லா புற்களை .
உங்களின் பார்வைக்குத்தரும் முயற்சி .என் பார்வையில் பட்ட சமுக நிகழ்வுகள்
இங்கு தகவல்களாக உங்கள் முகவரிக்கு .எனக்குன்னு எழுதுனது இல்ல ,ஆனா
வாடகைக்கு சொமந்தாலும் வலி வலி தான ...வாழ்த்துங்க வளர்கிறேன் .
நடந்தேறிய உண்மைகள் பெயர் மாற்றப்படாத இடங்களில் நீங்கள் மட்டுமே வாழ முடியும் என முடிவு செய்யப்பட்டது .வாழுங்கள் வரலாறு உங்களை வாழ்த்தட்டும் .நன்றி