படியளக்கிறான் பரமசிவன்.
எறும்பைஅடைத்து வைத்து
பார்த்து விட்டாள் பார்வதி.
பட்டினியில் பாரதிகள் பாடிக்கொண்டே...
மாநாடு
பேசி முடிந்தாகிவிட்டது
வாழ்க ...ஒழிக...கோசங்கள்
டீக்கடை மேசை உடைப்பில்
எதிரொலிக்கிறது.
ஈரத்துண்ட இழுத்துக்கட்டுங்க
பாரதத்தின் பட்டினி
பக்கத்து விட்டுக்கரருக்கு
தெரிந்துவிடப் போகிறது .
ஒரு தாய் தன் பிள்ளையிடம்
முணுமுணுப்பது
எத்தனை பேரின் காதில்விழுகிறது
சொல்லுங்கள் ...........
|
களிமண்ணிலா ...
இறைவன் மனிதனை படைத்தான் .
சிரிப்பகத்தான் இருக்கிறது .
முத்தமிடத் தெரியாதவனின்
கதையை படிக்கும் போது.
|
ஒவ்வொரு நாளும்
தூக்கத்தை தொலைத்து
காத்திருக்கிறார் ..விவசாயி ..
அறுவடைக்கு அல்ல
நடப்பட்ட பயிருக்கு
உயிர் பாய்ச்ச
வருமா ...மின்சாரம் என்று ஒ ...இது தான் இழவு காத்த கிளியோ .
|
சொட்டுச் சொட்டாய்
சொட்டிக் கொண்டிருக்கிறது .
தெருக் குழாய் .
தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறார்
ஊர் பிரசுரெண்டு .
|
மரம் வளர்ப்போம்
மாநிலம் காப்போம் .
அழகான ஓவியத்தோடு
இயற்கையாய் அமைந்ததிருக்கிறது
மரத்தாலான விளம்பர பலகை.
|